PLEASE SHARE THIS INFORMATION......... Have u ever heard about LPG gas cylinder’s expire date. I also didn’t know. How to find LPG cylinder’s expiry date? Very important information. Most of us do not know this. I came to know today from the gas stockiest, because here one accident occurred. Do you know that there is an expiry date (physical life) for LPG cylinders? Expired Cylinders are not safe for use and may cause accidents. In this regard please be cautious at the time of accepting any LPG cylinder from the vendor. Here is how we can check the expiry of LPG cylinders: On one of three side stems of the cylinder, the expiry date is coded alphanumerically as follows A or B or C or D and some two digit number following this e.g. D06. The alphabets stand for quarters – — A for March (First Qtr) – B for June (Second Qtr) – C for Sept (Third Qtr) – D for December (Fourth Qtr) The digits stand for the year till it is valid. Hence D06 would mean December qtr of 2006. your kind cooperation will save life of many people and create awareness among the public. ★ [ DON,T FORGET TO SHARE ]
Monday, January 20, 2014
expiry of LPG cylinders:
PLEASE SHARE THIS INFORMATION......... Have u ever heard about LPG gas cylinder’s expire date. I also didn’t know. How to find LPG cylinder’s expiry date? Very important information. Most of us do not know this. I came to know today from the gas stockiest, because here one accident occurred. Do you know that there is an expiry date (physical life) for LPG cylinders? Expired Cylinders are not safe for use and may cause accidents. In this regard please be cautious at the time of accepting any LPG cylinder from the vendor. Here is how we can check the expiry of LPG cylinders: On one of three side stems of the cylinder, the expiry date is coded alphanumerically as follows A or B or C or D and some two digit number following this e.g. D06. The alphabets stand for quarters – — A for March (First Qtr) – B for June (Second Qtr) – C for Sept (Third Qtr) – D for December (Fourth Qtr) The digits stand for the year till it is valid. Hence D06 would mean December qtr of 2006. your kind cooperation will save life of many people and create awareness among the public. ★ [ DON,T FORGET TO SHARE ]
Friday, January 17, 2014
பாட்டி வைத்தியம்:-
படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி வளர
பரீட்சை சமயத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் உள்ள பெரிய பிரச்சினை, எத்தனை முறை படித்திருந்தாலும் மனதில் பதியாமல் மறந்துவிடும். இந்தக் குறை நீங்க அரிசி, திப்பிலியை லேசாக வறுத்து, நைஸாக அரைத்து வெறும் வயிற்றில் தேனில் மூன்று சிட்டிகை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி ஏற்படும்.
பட்டு பாதங்களின் பாதுகாப்பு
வெய்யில் காலத்தில் குளிர்ந்த தண்ணீரில் உப்பைக் கலந்து அதில் பாதங்கள் முழ்கி இருக்கும்படி 10 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். குளிர் நேரத்தில் பாதம் அதிக குளிர்ச்சியாக உணர்ந்தால், இரவில் நல்லெண்ணெய் தேய்த்து விட்டு தூங்க வேண்டும். காலில் ஏற்படும் பித்த வெடிப்புகளுக்கு இரவு படுக்கப்போகும் போது இலுப்பை எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் தடவினால் பித்த வெடிப்புகள் குணமாகும்.
எண்ணெய் பட்டு கொப்பளம் ஆகாமலிருக்க...
சமையல் செய்யும் போது கொதிக்கும் எண்ணெய் உடலில் பட்டு விட்டால் உடனே அந்த இடத்தில் தேனை அல்லது கல்லுப்பு சிறிது தடவினால் கொப்புளம் ஏற்படாது.
கால் ஆணி நீங்க ...
இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும்.
5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்ய வேண்டும். தொடர்ந்து அரை மண்டலம் (20 நாட்கள்) வரை இவ்விதம் செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
உடல் சூட்டை தணிக்க...
சிறிது தண்ணீரில் சந்தனத்தை நன்றாக குழைத்து தடவினால் உடல் சூடு தணியும். மருதாணியை அரைத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் பூசினால் சூடு தணியும்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பின் அளவை குறைக்க வேண்டும். வற்றல், ஊறுகாய், நெய், இறைச்சி,
முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஒரு டம்ளர் பாலில் 25 கிராம் பூண்டுகளை தட்டிப் போட்டு, வேக வைத்து, ஆற வைத்து, வடிகட்டி குடிக்க வேண்டும்.
செம்பருத்திப் பூவில் கஷாயம் செய்து இத்துடன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குணமாகும்.
சேற்றுப்புண் குணமாக...
சேற்றுப் புண் மீது இரண்டு நாட்கள் பாம் ஆயில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மீண்டும் சேற்றுப் புண் வராது.
சமையலறையில் சூடுபட்டு கொள்ளும் போது...
சமையல் வேலை செய்யும் போது சில சமயம் கவனக் குறைவால் சூடுபட்டுக் கொள்ள நேரிடும். இதற்கு பர்னால், அது, இது என்று தேடி ஓட வேண்டியதில்லை. கைக்கு அருகிலேயே இருக்கும் பொடி (தூள்) உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் வராது.
ஆஸ்துமா
ஆஸ்துமா நோயாளிகளுக்குத் தேன் மிக நல்ல மருந்து
ஆடாதொடை இலை ஐந்தை, 10 மிளகுடன் எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.
ஆடாதொடை இலைகளை நிழலில் காய வைத்து பொடி பண்ணி வைத்துக் கொண்டும் சாப்பிட்டு வரலாம்.
கண்
தினமும் 3 தடவைகளாவது கண்களைக் கழுவ வேண்டும்.
பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை நன்றாக இருக்கும்.
முட்டையின் வெள்ளைக் கருவை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
ஒரு வரி இயற்கை மருத்துவம்:-
ஒரு வரி இயற்கை மருத்துவம்:-
ரோஜா அர்த்தர் : முக வசீகரம் கூடும்.
பாதாம்பருப்பு + தேங்காய் : ஞாபகசக்தி கூடும்
கதர் சன சூரணம் : காய்ச்சல் நிற்கும்
ஆத்திப்பழம் : அம்மை குணமாகும்
எலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்
பால் + கசகசா : துõக்கம் வரும்
கோதுமை, பீன்ஸ் : நரம்பு உறுதியாகும்
கருந்துளசி : பேன்களை ஒழிக்கும்
மல்லிகை இலை : கண் சிவப்பை போக்கும்
ரோஜா குல்கந்து : மலச்சிக்கல் நீங்கும்
வேப்பெண்ணெய் : மூக்கடைப்பு நீங்கும்
வெங்காயம் : நோய் தடுப்பு கூடும்
ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, காரட் : இருதயம் பலம் பெறும்
மாம்பழ ஜூஸ் : நரம்புத் தளர்ச்சி போக்கும்
ஐஸ் : மூக்கில் வரும் ரத்தம் தடுக்கும்
புதினா : கர்ப்பிணிகள் வாந்தியை நிறுத்தும்
சுக்கும், பெருங்காயம், பசும்பால் : தலைவலி நீங்கும்
குப்பை மேனி : மலேரியா தீரும்.
பேரிச்சை : கொழுப்பை நீக்கும்
டீ : வயிற்றுக் கடுப்பு போக்கும்
கொய்யாப்பழம் : நீரிழிவு போக்கும்
செம்பருத்தி : உடல் சூடு தணியும்
காரட் ஜூஸ் : ரத்த சோகை தீரும்.
முட்டைகோஸ் : அல்சர் தீர்க்கும்
மருதாணிப்பூ : சுகமான துõக்கம் தரும்
நெல்லிக்காய் : எலும்பு வளர்ச்சியடையும்
Thursday, January 16, 2014
முதுமொழியும் பழமொழியும்
1. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.
விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல.
ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம்
உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும்
கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை
விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில்
திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக
சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல
ஆகிவிட்டது.
2. அடியாத மாடு படியாது.
விளக்கம்: உண்மை
பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால்
கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.
3. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி
விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு
முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று
கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று,
கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம்
உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.
4. ஆறிலும் சாவு நூறிலும் சாவு
விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை
சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து
ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன்
சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான்
கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து
பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன்
இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு
என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும்
பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள்
மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை
மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக்
கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.
6. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன.
மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின.
இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த
சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என்
சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால்
கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது. அதாவது
அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய்
தெரியவில்லை.
7. பசி வந்திட பத்தும் பறந்து போகும்
விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி,
குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து
போகும் என்பது உண்மை.
8. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
விளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று
கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று
கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.
9. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
விளக்கம்: இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது
(என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான்
பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும்
தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.
10. சேலை கட்டிய மாதரை நம்பாதே
விளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள்.
சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது கண்களை அகட்டி வேறு ஒரு
ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.
11. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது
ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால்
கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே
என்பது தான் உண்மை.
பற்களை எழிதில் பராமரிக்க வேண்டுமா?
பற்களில் காரை படிந்துள்ளதா....?
இனி கவலை எதற்கு....?
என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.
பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.
நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.
பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..
கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.
வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.
முயற்சித்துப் பாருங்களேன்.
Subscribe to:
Posts (Atom)