Friday, October 14, 2011

நண்பனாக வழிகாட்டும் தளம்

பேஸ்புக் யுகத்தில் டிவிட்டர் காலத்தில் எல்லாவற்றையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வழி இருக்கிறது. ஆனால் நண்பர்களே இல்லாத நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வது? அதாவது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத வலியும் வேதனையும் இருப்பவர்கள் நிலையை எண்ணி பாருங்கள். ஏதோ ஒரு பிரச்சனை வாட்டிக் கொண்டிருக்கும். பல காரணங்களினால் அவற்றை வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் போகலாம் அல்லது தயக்கம் தடுக்கலாம் இல்லை மற்றவர்களிடம் சொன்னால் தவறாக எடுத்து கொள்வார்களோ என்று அஞ்சலாம்.
இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்காக என்றே ஒரு சமூக வலைப்பின்னல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. “விஸ்ஸ்டம்” என்னும் இந்த தளத்தின் மூலம் உள்ளத்தை வாட்டிக்கொண்டிருக்கும் சோக கதைகளை பகிர்ந்து கொண்டு ஆறுதல் அடையலாம். அடிப்பையில் இந்த தளம் தனியாக இருப்பதாக உணர்பவர்கள் தங்களை போலவே உள்ளவர்களோடு தொடர்பு கொள்வதற்கான வலைப்பின்னல் சேவை எனலாம். இந்த தளத்தில் பிரச்சனையை பகிர்ந்து கொள்பவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமலேயே பிரச்ச்னையை மட்டும் வெளிப்படுத்தலாம். எனவே நண்பர்களிடம் சொல்ல முடியாத விஷயத்தை கூட இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
Posted Image
இப்படி பகிர்ந்து கொள்வதால் என்ன பயன்? ஒன்று மனதில் உள்ளதை இருக்கி வைத்தது போல இருக்கும். அதைவிட முக்கியமாக அதே பிரச்சனையில் அல்லது அதே போன்ற சூழலில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியும் என்பது தான் இந்த சேவையின் தனிச்சிறப்பு. அதாவது இந்த தளத்தில் ஒருவர் பிரச்சனையை பகிர்ந்து கொண்ட பின் அதே போன்ற பிரச்சனையை எதிர் கொண்டவரை தொடர்பு கொண்டு பேச முடியும். உதாரணத்திற்கு ஒருவர் மன முறிவின் வேதனையை அனுபவித்து கொண்டிருக்கும் பட்சத்தில் அவரைப்போலவே மனமுறிவுக்கு ஆளானவர் அல்லது அந்த சூழலை எதிர்கொண்டு மீண்டு வந்தவரோடு தொடர்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

ஒரே படகில் பயணம் செய்பவர்கள் என்று சொல்வதை போல ஒரே சூழலில் இருப்பவர்கள் பேசும் போது மற்றவர் நிலையை எளிதாக புரிந்து கொள்ள முடியும் அல்லவா? மேலும் அந்த நிலையை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளையும் ஆறுதல் வார்த்தையையும் கூற முடியும் அல்லவா? இந்த அற்புதத்தை தான் இந்த தளம் சாத்தியமாக்குகிறது. பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்களுக்கு தாங்கள் மட்டுமே அந்த நிலையில் இருப்பது போன்ற ஒரு உணர்வு இருக்கும் அல்லவா? அந்த உணர்வில் இருந்து விடுபட முதலில் உதவுகிறது இந்த தளம்.
தீராத கடன் தொல்லையோ, தலைமுடி உதிர்வதோ, மனமுறிவோ, தன்னம்பிக்கை குறைவோ, உடல் பருமனோ எந்த பிரச்சனை என்றாலும் சரி இந்த தளத்தில் அதனை பகிர்ந்து கொள்ளலாம். உடனே இந்த தளம் ஏற்கனவே சோகங்களை பகிர்ந்து கொண்டவர்களில் அதே நிலையில் இருப்பவர்களை கண்டுபிடித்து தொடர்பு ஏற்படுத்துகிறது. அதன் பிறகு அவருடன் கருத்து பரிமாற்றத்தில் ஈட்டுபட்டு ஆறுதல் அடையலாம். கேள்விகள் கேட்டு ஆலோசனையும் பெறலாம். எல்லாவற்றுக்கும் மேல் ஒருவித நட்புணர்வு ஏற்பட்டு நமக்கென துணை இருக்கும் தெம்பை பெறலாம்.
ஒரே போன்ற பிரச்சனையில் இருப்பவர்கள் என்றாலும் ஒவ்வொருவரது கோணமும் அணுகுமுறையும் வேறுவேறாக இருக்கும். அவற்றையும் அலசிப்பார்த்து எல்லாவிதங்களிலும் ஒத்து போகிறவர்களை இணைத்து வைக்கிறது இந்த தளம். பகிர்வதற்கு முன்பே இந்த தளத்தில் தங்கள் பிரச்சனையை குறிப்பிட்டு அதே பிர்ச்சனையால் பாதிக்கப்பட்டவர்களையும் தொடர்பு கொள்ளலாம். யாரிடமாவது சொல்லி புலம்ப மாட்டோமா என நினைத்து கொன்டிருப்பவர்களுக்கு இந்த தளம் உற்ற நண்பனாக வழிகாட்டும்.
Go To Website:- http://www.wissdom.com/
http://puthiyaulakam.com/?p=2667

நமசிவாய மந்திரம்


சி வ ய ந ம
ய ந ம சி வ
ம சி வ ய ந
வ ய ந ம சி
ந ம சி வ ய
-நாம் நினைத்த சர்வ காரியமும் சித்தியாக இந்த மந்திரத்தை பாக்கெட்டில் வைத்து கொண்டால் எங்கு சென்றாலும் நன்மை உண்டாகும்.

இலவச இணையத்தளம் உருவாக்க முத்தான 30 தளங்கள்!

இலவசமாக இணையத்தளங்களை ஆரம்பிக்க எண்ணற்ற சேவை தளங்கள் இருக்கின்றது. ஏராளமானவர்கள் ப்ளாக்கர் வேட்பிரஷ் மற்றும் இதர தளங்களையே அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால் இவற்றை விடவும் ஏராளமான தளங்கள் இருக்கின்றன. நாம் இன்று இலவசமாக இணையத்தளங்களை வடிவமைப்பு செய்திட உதவும் தளங்களின் பட்டியலை தரப்போகின்றோம். இதில் உங்களுக்கு பிடித்த தளங்களுக்கு சென்று உங்கள் பெயரில் நீங்கள் விரும்பிய வாறு இணையத்தளங்களை அமைத்துக்கொள்ள முடியும். 30 இணையத்தளங்கள் வரை இங்கு தந்துள்ளோம். இன்னும் பல தளங்கள் இருக்கின்றது இருந்தாலும் இதில் எந்த தளம் உங்களுக்கு இலகுவாக இருக்கிறதோ அதனை நீங்கள் தெரிவுசெய்யுங்கள்…வாழ்த்துக்கள்.

www.blogger.com

www.wordpress.com

www.weebly.com

www.webs.com

www.wix.com

www.getshopped.com

www.webnode.com

www.jimdo.com

www.yola.com

www.350.com

www.lifeyo.com

www.moonfruit.com

www.jimdo.com

www.edicy.com

www.moogo.com

www.ewedding.com

www.homestead.com

www.webspawner.com

www.terapad.com

www.ucoz.com

www.2createawebsite.com

www.webstarts.com

www.freesite.org

www.freewebspace.com

www.spruz.com

www.make-website.com

www.free-space.net

www.2itb.com

www.squarespace.com

www.hpage.கொம்

Wednesday, October 12, 2011

சமையலறை ஆங்கிலம்




மளிகைப் பொருட்கள் / சமயல்பொருட்கள் / காய்கனிகள் / மூலிகை கீரைகளின் ஆங்கில வார்த்தைகள். விடுபட்டவற்றை சொல்லலாம். தவறுகளை சுட்டிகாட்டலாம்.

ஜாதிக்காய் - Nutmeg - நட்மெக்
ஜாதிபத்திரி - Mace - மெக்
இஞ்சி - Ginger - ஜின்ஜர்
சுக்கு - Dry Ginger - டிரை ஜின்ஜர்
பூண்டு - Garlic - கார்லிக்
வெங்காயம் - Onion - ஆனியன்
புளி - Tamarind - டாமரிண்ட்
மிளகாய் - Chillies - சில்லிஸ்
மிளகு - Pepper - பெப்பர்
காய்ந்த மிளகாய் / சிவப்பு மிளகாய் - Red chillies
பச்சை மிளகாய் - Green chillies
குடை மிளகாய் - Capsicum
கல் உப்பு - Salt - ஸால்ட்
தூள் உப்பு - Table salt
வெல்லம்/கருப்பட்டி - Jaggery - ஜாக்கரீ
சர்க்கரை/சீனி - Sugar - ஸுகர்
கற்கண்டு - Sugar Candy
ஏலக்காய்/ஏலம் - Cardamom - கார்டாமாம்
பாதாம் பருப்பு/வாதுமை கொட்டை - Almonds
முந்திரி பருப்பு/அண்டிப்பருப்பு - Cashew nuts
கிஸ்மிஸ் - Dry Grapes
லவங்கம்,கிராம்பு - Cloves - க்லெளவ்ஸ்
கசகசா - Poppy - பாப்பி
உளுந்து - Black Gram - பிளாக் கிராம்
கடலைப் பருப்பு - Bengal Gram - பெங்கால் கிராம்
பச்சைப்பயறு/பயித்தம் பருப்பு / பாசிப் பயறு - Moong Dhal/ Green Gram - மூனிங் தால்/கீரின் கிராம்
பாசிப்பருப்பு - Moong Dal
கடலைப்பருப்பு - Gram Dal - கிராம் தால்
உழுத்தம் பருப்பு - Urid Dhal
துவரம் பருப்பு - Red gram / Toor Dhal- ரெட்கிராம்
கம்பு - Millet - மில்லட்
கேழ்வரகு - Ragi - ராகி
கொள்ளு - Horse Gram - ஹார்ஸ் கிராம்
கோதுமை - Wheat - வீட்
கோதுமை ரவை - Cracked Wheat
சோளம் - Corn
சோளப்பொறி - Popcorn
எள்ளு - Sesame seeds / Gingelly seeds
நெல் - Paddy - பாடி
அரிசி - Rice - ரய்ஸ்
அவல் - Rice flakes
பச்சை அரிசி - Raw Rice
புளுங்கல் அரிசி - Par boiled rice
கடலை மா - Gram Flour
மக்காச்சோளம் - Maize - மெய்ஸ்
வாற்கோதுமை - Barley - பார்லி
பச்சை பட்டாணி - Green peas
சேமியா - Vermicelli
சவ்வரிசி - Sago
ரவை - Semolina
கொண்டை/கொண்டல் கடலை - Chickpeas/Channa
கடுகு - Mustard - முஸ்டார்ட்
சீரகம் - Cumin - குமின்
வெந்தயம் - Fenugreek
சோம்பு,பெருஞ்சீரகம் - Anise seeds
பெருங்காயம் - Asafoetida - அசஃபோய்டைடா
மஞ்சள் - Turmeric - டர்மரிக்
ஓமம் - Ajwain / Ajowan
தனியா - Coriander - கோரியண்டர்
கொத்தமல்லி தழை - Coriander Leaf -கோரியண்டர் லீப்
கறிவேப்பிலை - Curry Leaves
கஸ்தூரி - Musk - மஸ்க்
குங்குமப்பூ - Saffron - சஃப்ரான்
பன்னீர் - Rose Water - ரோஸ் வாட்டர்
கற்பூரம் - Camphor - கேம்ஃபர்
மருதாணி - Henna - ஹென்னா
துளசி - Tulsi
எலுமிச்சை துளசி - Basil
எண்ணெய் - Oil - ஆயில்
கடலை எண்ணெய் - Gram Oil - கிராம் ஆயில்
தேங்காய் எண்ணெய் - Cocoanut Oil - கோக்கநட் ஆயில்
நல்லெண்ணெய் - Gingili Oil/Sesame oil - ஜின்ஜிலி ஆயில்
வேப்ப எண்ணெய் - Neem Oil - நீம் ஆயில்
பாமாயில் - Palm Oil
ஆலிவ் ஆயில் - Olive Oil
பால் - Milk - மில்க்
பால்கட்டி - Cheese - ச்சீஸ்
நெய் - Ghee - கீ
வெண்ணெய் - Butter - பட்டர்
தயிர் - Curd/Yoghurt - க்கார்ட்
மோர் - Butter Milk - பட்டர் மில்க்
கீரை - Spinach - ஸ்பீனச்
அவரை - Beans - பீன்ஸ்
கர்பூரவள்ளி - Oregano
நார்த்தங்காய் - Citron - சிட்ரான்
திருநீர்பச்சை - Ocimum-basilicum
சீத்தாப்பழம் - Custard-apple
மாதுளை - Pomegranate
பரங்கிக்காய்/பூசனிக்காய் - Pumpkin
கருங்காலி மரம் - Cutch-tree
அதிமதுரம்-Liquorice
அருகம்புல் - Bermuda Grass
வல்லாரை கீரை - Pennywort (Centella asiatica)
புதினா இலை - Mint leaves
வெற்றிலை - Betel leaves
நொச்சி இலை - Vitexnegundo (Chaste Tree)
அத்தி - Fig
கீழாநெல்லி - Phyllanthus nururi
தாழை மரம் - Pandanus Odoratissimus,Fragrant Screwpine
தூதுவளை - Purple-fruited pea eggplant
துத்திக்கீரை - Abutilon indicum
பிரமத்தண்டு - Argemone mexicana Linn,(Ghamoya) Papaveraceae
கோவைக்காய் - Coccinia grandis
முடக்கத்தான் கீரை - Cardiospermum halicacabum
குப்பைமேனி - Acalypha indica; linn; Euphor biaceae
நத்தைச்சூரி - Rubiaceae,Spermacoce hispida; Linn;
சோற்றுக்கற்றாழை - Aloe Vera
நாவல் பழம் - Naval fruit (Syzygium jambolana)
பேய் மிரட்டி செடி - Anisomeles malabarica, R.br, Lamiaceae
தேள்கொடுக்கு செடி - Heliotropium
நிலக்குமிழஞ் செடி - Gmelina Asiatica
நெல்லிக்காய் - Amla,Indian Gooseberries
சதகுப்பை (சோயிக்கீரை,மதுரிகை) - Peucedanum grande; Umbelliferae
சிறு குறிஞ்சான் - Gymnema Sylvestre; R.Br.Anclepiadaceqe
அரிவாள்மனை பூண்டு - Sida caprinifolia
அகத்திக்கீரை - Sesbania grandiflora
செண்பகப் பூ - Sonchafa (champa)
சுண்டைக்காய் - Solanum torvum(Turkey Berry)
செம்பருத்தி - Hibiscus(Shoe Flower)
கரும்பு - Sugar cane
நீர்முள்ளி - Long leaved Barleria (Hygrophila auriculata)
அன்னாசிப் பூ - Star Anise
பூவரசு - Portia tree (Thespesia populnea)
ஊசிப்பாலை - Oxystelma Secamone
அமுக்கரா சூரணம்,அசுவகந்தி - Indian winter cherry
கத்தரிக்காய் - Egg plant / Aubergine / Brinjal
கொய்யாப் பழம் - Guava
மரவள்ளிக் கிழங்கு - Tapioca
சர்க்கரை வள்ளி கிழங்கு/சீனி கிழங்கு - Sweet Potato
சேனைக்கிழங்கு/கருணைக்கிழங்கு - Yam
விளாம் பழம் - Wood apple
முள்ளங்கி - Radish / parsnip
புடலங்காய் - Snake gourd
பாகற்காய் - Bitter gourd
வெண்டைக்காய் - Ladies Finger/ Okra
வேர்கடலை/நிலக்கடலை - Peanut
வாழைக்காய் - Ash Plantain
வாழைப்பழம் - Banana
ஊறுகாய் - Pickle
உருளைக் கிழங்கு - Potato
தேங்காய் - Coconut
இளந்தேங்காய் - Tender Coconut
இளநீர் - Tender Coconut water
பதநீர்/பயினி - Neera /Palmyra juice
கள்ளு - Palm wine/Palm Toddy
சுண்ணாம்பு - Lime
ஆப்பச் சோடா - Baking Soda
தீப்பெட்டி - Match Box
ஊதுபத்தி/ஊதுவர்த்தி - Incence Stick

nandri : - http://pkp.blogspot.com/

Tuesday, October 4, 2011

தோப்புக்கரணம்


 
 
தோப்புக்கரணம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
வியாழன், 10 மார்ச் 2011




 
அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.  ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார். யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
 தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார். Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன. ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.
 இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
 உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். மூச்சை நன்றாக இழுத்தபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக வெளியே விட்டபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும். செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

நன்றி : http://www.sivasiva.dk/sivasivamanagementsystem/

ஆன்மீகம்

புரட்டாசி மாத மகிமை

புரட்டாசி மாதப் பிறப்பு :   செப்டம்பர்  18Tamil astrology | tamil jothidam | tamil-astrology-2011 | தமிழ்-ஜோதிடம் | tamil-free-horoscope | tamil-prediction | tamil-astrology-softwre | jothidam | ஜாதகம் | குரு-பெயர்ச்சி-பலன் | சனி-பெயர்ச்சி-பலன்,madurai jothidam,best astrologer, இலவச ஜாதகம் ,ஜோதிடம்,ஜாதக கட்டம்,2012 rasi palangan,jathaga kattam,online astrology,
பெருமாளின் அனுகிரகம் பெற போகும் மாதம்.
புரட்டாசி மாத பிறப்பு:
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு
ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது,புரட்டாசி மாதம் பிறக்கிறது.
*பெருமாளின் சிறப்பு சனிக்கிழமை:
இம்மாதத்து சனிக்கிழமை பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும். ஜாதக               ரீதியாக  சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர்,பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால் பெருமாளின் அருளால்
சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி  சீனிவாசனுக்கு  புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி இந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
*நவராத்திரி பூஜைக்குரிய மாதமும் புரட்டாசி:
நவராத்திரி பூஜைக்கு உரிய  செப்டம்பர் 28  இம்மாதத்தில் நடக்கிறது.  அம்பாளை முதல் மூன்று நாட்கள் லட்சுமியாகவும்,அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிப்டுகிறோம். தைரியம்,செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய அம்பாள்  கோவில்களில் விசேஷ பூஜைகள் நடக்கும்.  சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜயதசமி கொண்டாடுகின்றனர். இந்நாட்களில்சில அம்பாள் கோவில்களில் ‘பாரிவேட்டை’ எனும் வெற்றித் திருவிழா நடத்தப்படும்.
புரட்டாசி மாதம் ஆன்மிக மாதம். இம்மாதத்தில் தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள்     மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம். 

nandri :- http://tamilastrology.yourastrology.co.in/

நவராத்திரி விரதம்

1
நவராத்திரி,Tamil astrology | tamil jothidam | tamil-astrology-2011 | தமிழ்-ஜோதிடம் | tamil-free-horoscope | tamil-prediction | tamil-astrology-softwre | jothidam | ஜாதகம் | குரு-பெயர்ச்சி-பலன் | சனி-பெயர்ச்சி-பலன்,madurai jothidam,best astrologer, இலவச ஜாதகம் ,ஜோதிடம்,ஜாதக கட்டம்,2012 rasi palangan,jathaga kattam,online astrology
நவராத்திரி விரதம் புரட்டாசி  மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை  குறித்து நோற்கப்படும்  நோன்பாகும். இது தட்சணாயண் காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும்  சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.
நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் நோன்பு  சாரதா நவராத்திரி நோன்பாகும்.
மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான் அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)
நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்
இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான்

துர்க்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை.வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ”கொற்றவை ” , ”காளி” என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ‘ நவராத்திரி ‘ எனப்படும்.
அவனை வதைத்த பத்தாம் நாள் ‘ விஜயதசமி‘[ விஜயம் மேலான வெற்றி] [ மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில் சிற்ப வடிவில் நாம் கண்டுள்ளோம்] வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள்.
நவதுர்க்கை: வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, ஆசூரி துர்க்கை லவண துர்க்கை . இஇவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.
இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள். இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர்.
அஷ்டஇலட்சுமி : ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி, வீரஇலட்சுமி, விஜயலட்சுமி , கஜ இலட்சுமி .இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.
சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சகதி. தமிழ் நூல்கள் சரஸ்வதியை, ‘ஆற்றங்கரைச் சொற்கிழத்தி ‘ என்று குறிப்பிடுகிறது. இஇவளுக்குத் தனி கோயில் இருக்குமிடம் ஊர் கூத்தனூர். கம்பருக்காக கொட்டிக் கிழங்கு விற்றவள்.
சரஸ்வதி பூஜை : நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் – திருவோணம் அன்றே விஜயதசமி. சமுதாயத்தில் தொழில் , புலமை என்ற இஇரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம்.புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடபுடையது.
எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இஇவை மேலான நாட்களாகும்.
விஜய தசமி:
ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி , பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி – வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்.
அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மாகலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.
நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை.
இதனால், நவராத்திரி வழிபாட்டில் மிகப் பலகன்னியர்களும், அவர்களின் குடும்பத்தாரும்ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
Tamil astrology | tamil jothidam | tamil-astrology-2011 | தமிழ்-ஜோதிடம் | tamil-free-horoscope | tamil-prediction | tamil-astrology-softwre | jothidam | ஜாதகம் | குரு-பெயர்ச்சி-பலன் | சனி-பெயர்ச்சி-பலன்,madurai jothidam,best astrologer, இலவச ஜாதகம் ,ஜோதிடம்,ஜாதக கட்டம்,2012 rasi palangan,jathaga kattam,online astrology
கொலு வைப்பது எதற்காக ?பயன்கள் ?
காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான். “ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்…’ என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான். எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது. மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு.
ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.
1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.
இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது

nandri :- http://tamilastrology.yourastrology.co.in/

பூஜைகள்

சரஸ்வதி பூஜை
சரஸ்வதி பூஜை அன்று நமது தொழில் கருவிகள், கணக்குப் புத்தகங்கள், படிக்கும் புத்தகங்கள், வாகனங்கள் ஆகியவற்றை வைத்து சரஸ்வதி படத்துக்கு வெள்ளை நிற மலர்களால் அலங்காரம் செய்து, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி படித்து நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும்.
சரஸ்வதி பூஜையில் புதிய புத்தகம் ஒன்றை வாங்கி வைத்து வழிபட்டு மறுநாள் படித்தல் மிகவும் சிறப்பானது.
ஆயுதம் என்பதன்  உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது எனலாம்.உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம்.
ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.
ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமே.

விஜயதசமி
தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருள்கள் உண்டு. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று மூன்று சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , சண்ட முண்டனை வதம் செய்த நன்னாள் விஜயதசமி. இன்று ஸ்ரீ அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.
ஸ்ரீ துர்கா தேவி
விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று ஸ்ரீ அன்னை விஜயம் செய்யும் நாளே ’விஜயதசமி’ என்றும் கூறப்படுகிறது. அன்று ஸ்ரீ அன்னையே நம் இல்லம் தேடி வருகிறாள் என்பதே இந்நாளின் மிகப் பெரிய சிறப்பு.
அன்றுதான் ராவணாசுரனை ஸ்ரீ ராமன் வதம் செய்தான். பாண்டவர்கள் தங்களது போரின் வெற்றிக்கு நன்றி கூறும் விதமாக அன்னை எனும் மகாசக்திக்கு, தாங்கள் போரிட்ட ஆயுதங்களை முன் வைத்து வழிபாடு செய்த நன்னாளும் இதுவே!
இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய இந் நன்னாள் மற்றொரு விதத்திலும் மிகுந்த சிறப்புப் பெற்றதாகிறது. ஆம், இந் நன்னாளில் தான் மகா அவதார புருடர் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா மகா சமாதி அடைந்தார். அது மட்டுமல்ல ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் ஜீவ சமாதி கொண்ட தினமும் இதுவே!
விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று.

nandri :- http://tamilastrology.yourastrology.co.in/