புரட்டாசி மாதப் பிறப்பு : செப்டம்பர் 18
பெருமாளின் அனுகிரகம் பெற போகும் மாதம்.
புரட்டாசி மாத பிறப்பு:
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு
ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது,புரட்டாசி மாதம் பிறக்கிறது.
*பெருமாளின் சிறப்பு சனிக்கிழமை:
இம்மாதத்து சனிக்கிழமை பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும். ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர்,பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால் பெருமாளின் அருளால்
சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி இந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
*நவராத்திரி பூஜைக்குரிய மாதமும் புரட்டாசி:
நவராத்திரி பூஜைக்கு உரிய செப்டம்பர் 28 இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை முதல் மூன்று நாட்கள் லட்சுமியாகவும்,அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிப்டுகிறோம். தைரியம்,செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய அம்பாள் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடக்கும். சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் விஜயதசமி கொண்டாடுகின்றனர். இந்நாட்களில்சில அம்பாள் கோவில்களில் ‘பாரிவேட்டை’ எனும் வெற்றித் திருவிழா நடத்தப்படும்.
புரட்டாசி மாதம் ஆன்மிக மாதம். இம்மாதத்தில் தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.
nandri :- http://tamilastrology.yourastrology.co.in/

No comments:
Post a Comment